நிமிர்ந்து நில்
நிமிர்ந்து நில்
பகுத்தறிவு திறனால் மனிதன் உயர்ந்து நின்றான்
செயற்கை அறிவினை வெற்றி கண்டான்
சுதந்திரம் அடைந்தோம்;தனி மனித சுதந்திரம் உண்டோ?
சட்டங்கள் கூறும் வரியினை மனிதம் எப்போது உணரும்?
பெண்கள் ஆண்களுக்கு நிகர்,சமஉரிமை கொள்கை வந்தப்போது
இன்றும் மனதளவில் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் சிலர்
அகன்ற அகிலம் அனைவருக்கும் சொந்தம் எப்போது ?
தன் சொந்த மண்னையே விட்டு செல்ல ;திணிக்கும் கயவர்கள் இப்போது.
பொதுநலத்தில் சுயநலம் அடக்கம்,இங்கோ சுயநலத்தில் உலகம் தொடக்கம்
சாதிகள் ஒழிய வேண்டும் என்னும் கூக்குரல் ஒருபுறம்
சாதி அரசியலில் வெற்றி பெற செய்யும் ஆரவாரக்குரல் மறுப்புறம்
இன்று தட்டிக்கேட்டால் குற்றம்
விட்டுக்கொடுப்பவர்கள்(உரிமையை) நம் சுற்றம்
புறக்கண் கேளிக்கைகளை போற்றியது போதும்
உன் அகக்கண் கட்டுகளை அவிழ்தெறிதல் வேண்டும்
விவசாயத்தின் மீது வெறும் சாயத்தை பூசி விட்டனர் அரக்கர்கள்,
சாயம் நிறம் போகும் என்பதை மறந்தீரோ?
'குன்றென நிமிர்ந்து நில்'
இந்த பாரெங்கும் உரக்கச் சொல் !!!