காதலின் நினைவுகள்
காதலின் நினைவுகள்


நிலவின் ஒளியில் உன்னுடைய நினைவுகள்
விண்மீன்கள் வெட்கப்படுகின்றது இந்த ஒளிசிலையைப் பார்த்து;
அவளது பற்கள் முத்து சிதறல்கள் ,
வானவில்லின் ஏழு வண்ணங்கள்,
தோற்கிறது உன் புருவங்களில்;
உனது கருவிழிகளின் அதிர்வால் ,
என் மனம் நொறுங்குகிறது;
கோட்டையின் மதில்களை கொடிகள் தழுவும்,
எனது கொடி என் மனதை தழுவுகிறாள்;
உன்னை காண வேண்டும் என்ற ஏக்கத்தில் ,
பட்டினியில் வாடும் ஏழை ஆகிறேன்;
உனது பாதங்கள் இப்பூமியில் படும்போது,
ஊற்று சுரந்தாலும் ஐயம் இல்லை;
ஊழி காலம் கடலைப் போல எழும்புகிறேன்,
காதலை காட்டாமல் சென்றால் கானல் நீர் நான்.
காதல் கவிதைகள் பல எழுதிவிட்டேன்,
உனது ஆசையையும் நூறு நிலவுகளில் கூறிவிட்டாய்,
தென்றல் வந்து தாலாட்டுகிறது,
உறக்கத்தில் கண் அயர,
தினம் தினம் அன்பினைக் கொண்டு,
காதல் கனவுகள் ஒன்றாய் காண்போம்;
ஜென்மங்கள் பல கடந்து உயிர் வாழ்வோம்!!!