நிறம்
நிறம்
உற்சாகத்தில் முகத்தில் மலர்வது ஆரஞ்சு நிறம்,
கோபத்தில் கனல் எழும்பினால் சிகப்பு நிறம்,
பொறாமையின் வெளிப்பாடு நீல நிறம்,
காதலின் நாணத்தில் கன்னம் சிவந்தால் ரோஸ் நிறம்,
பெண்மையின் பூரணம் தாய்மை-மஞ்சள் நிறம்,
தோல்வியை தழுவும்போது வெண்மை நிறம்,
துரோகத்தின் வெளிப்பாடு பச்சை நிறம்,
பொய்யின் பிரதிபலிப்பு சாம்பல் நிறம் ,
வெற்றியின் சுவையோ வயலட் நிறம்,
தனிமையில் தவித்தல் பிரவுன் நிறம்,
வாழ்க்கை இருண்டால் கருப்பு நிறம்,
புறக்கண் இன்றி அக கண்ணால் பார்த்தால் என்ன நிறம்?
அதை நிறை என்று பார்ப்போருக்கு 'பொன்னிறம் '.