STORYMIRROR

இந்திரா சண்முகானந்தன்

Abstract

3  

இந்திரா சண்முகானந்தன்

Abstract

நட்பின் பலம்

நட்பின் பலம்

1 min
273

இதயத்தின் ஓரம்,ஒரு நடுக்கம்

எப்போதும் உனக்காக அது துடிக்கும்;

கல்லூரி வாழ்க்கை மேகங்கள் போல

ஒரு நாள் கலைந்து தான் போகும்.

எனது நினைவோ கை ரேகை போல

என் உயிர் பிரியும் வரை அது நிலைக்கும்,

கடிதங்கள் கூட நான் இதுவரை எழுதியது இல்லை

இந்த மாற்றம் ஏன் என்று புரியவில்லை;

மழைகளில் ஒன்றாய் நணைந்தோம்,

மாலைகளில் கதை பேச ஒன்றாய் அமர்ந்தோம்,

எனது பயங்களை தூக்கி போட்டேன்.

எனக்காக நீ வந்த போது,

இருட்டினில் படுத்திருந்தேன் அன்னை கருவில்,

வெளிச்சத்தில் குடி வந்தேன் உனது வழியில்;

யாவரையும் எதிர்க்கும் துணிவு காதலுக்கு உண்டு எனில்,

யானைகளையே பிளக்கும் துணிவு என் நட்புக்கு உண்டு!!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract