காதல் தோல்வி
காதல் தோல்வி


உப்பு காற்று வீசும் கடற்கரை நான் ,
உடமைகளை விட்டு தவிக்கும் அகதி நான்,
கோடை காலத்தில் தண்ணீருக்கு ஏங்கும் செடி நான்,
மன குமுறல்களை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறேன்;
மணிக்கணக்கில் உன்னை எண்ணி அழுகிறேன்,
மழைகளில் குடையென வாழ்கிறேன்,
நிழலை நிஜமாய் நினைத்து நோகிறேன்,
என் காலத்தை உன் காலடியில் முடித்துவிட்டேன்;
நீ புண்படுத்திய பின்னும் புண்சிரிப்பால் மலர்கிறேன்.
நீ என்னை விட்டு சென்ற பிறகும்,
இலையுதிர் கால மரங்கள் ஆகிறேன்.
உனது மனைவிக்காக எப்போதும் வேண்டுகிறேன்
அவளையும் நீ விட்டு செல்லக் கூடாது என்று!!!