STORYMIRROR

இந்திரா சண்முகானந்தன்

Abstract

5  

இந்திரா சண்முகானந்தன்

Abstract

சாலையோர தேனீர் கடை

சாலையோர தேனீர் கடை

1 min
529

கதிரவனின் செங்கதிர்கள் வானத்தை சூழ,

சிறந்த இசையை இயற்கை வாயிலாக பறவைகள் சொல்ல,

தென்றலின் தீண்டலால் இலைகளின் அசைவுகள்;

சற்று தொலைவில் 'செய்திகள் வாசிப்பது' என ஒலியும்

காற்றின் வருடலால் ஓலையின் சத்தமும் சேர,

செங்கதிர்கள் கண்ணாடி கோப்பையை ஊடுருவ

காலை பொழுதை அழகாக்கியது தேனீர்கடை ;

அரசியல் பேசி வழிபோக்கர்களின் வழிகாட்டியாக தேனீர்கடை அன்பர்கள்,

வருடங்கள் கடந்து ஆர்வத்துடன் ஊருக்கு சென்றேன்.

அதிர்ச்சி! நெடுஞ்சாலைத்துறையால் காணாமல் போனது,

தேனீர்கடை மட்டுமல்ல என் நினைவுகளும் தான்!!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract