எனது திருமணம்
எனது திருமணம்
நொடி பொழுது நீங்காமல் யோசிக்கிறேன்
உனது உருவம் எப்போது கனவில் வருமென்று,
இமைகள் கூட மூடாமல் ஏங்குகிறேன்
நீ எப்போது என் அருகில் அமர்வாய் என்று ,
சிறு காயத்தை மனதில் ஏந்தி கொண்டு நடக்கிறேன் ;
உனது பார்வையினால் பூக்களை போல உதிர்கிறேன்;
பட்டாம்பூச்சியை போல் சுற்றித் திரிந்தேன் உன்னை பார்க்கும் வரை
இறக்கை வெட்டிய தும்பியைப் போல உன்னை சுற்றி வருகிறேன்
நேரத்தை கடைப்பிடித்ததே இல்லை பள்ளியில்,
இப்போது கல்லூரி நேரம் முடிந்தும் வீடு செல்ல மறுக்கிறேன்
உன்னை கவர முயற்சிகள் பல எடுத்துவிட்டடேன்
இருந்தும் ஒரு நாளும் தளர்ந்தது இல்லை
ஒரு முறை கூறி விடு உனது காதலை
இந்த நிமிடம் உலகத்தையே பிரபஞ்சத்தில் இருந்து வெளியேற்றுவேன்,
இப்படி பல முறை நினைத்து மகிழ்ந்து விட்டேன்
நமது திருமண புகைப்படத்தை பார்த்து,
இப்படிக்கு அயர்ந்து வீடு திரும்பும் கணவனை
எதிர்கொண்டிருக்கும் அன்பான மனைவி!!!