எனக்குள் நீ
எனக்குள் நீ


உனது விழியில் எனது இதயத்தை தொலைத்தேன்
உன்னை தினமும் கண்டு எனது பொழுதை கழித்தேன்
நீ எங்கே சென்றாலும் நிழலாய் தொடர்ந்தேன்
உன் பார்வை என் மீது விழாதா என்று அழுதேன்
உன்னையே நினைத்து முப்பொழுதும் கரைந்தேன்
நாட்கள் செல்ல செல்ல என்னையே நான் மறந்தேன்
ஒருதலை காதல் வெற்றி பெறாது என்பதை உணர்ந்தேன்
உன்னுடன் வாழ்ந்தது போல் எண்ணி கனவில் மிதந்தேன்
தண்ணீர் இல்லாத வரண்ட பாலைவனம் போல
உன்னையே நினைத்து வாழ்கின்றேன்
உனது ஒரு துளி மழைநீராகிய காதலை கொண்டு
எப்போது நீ என்னை அணைப்பாய் என்று.