Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Drama Romance

5  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Drama Romance

வாய் மையில் வாய்மை இல்லை..

வாய் மையில் வாய்மை இல்லை..

1 min
503


இதழ்களை செம்மை ஆக்கிடும்

வாய் மையில் இல்லை வாய்மை


கண்களை கவர்ச்சியாய் காட்டும்

கண் மையின் உள்ளேயும் பொய்மை


வெள்ளை முடியை கருமையாக்கும்

முடி மையை நம்ப முடியாமையும்


முதுமையை மூடி இளமையாக்கும்

கரு மையை நம்பிடும் முதுமையும்

 

உண்மை இல்லா எல்லா மையின்

வலிமை மிக்க பொய் மையின் மகிமை..


தூய்மையான தாய்மை மட்டுமே

பெண்மைக்கு என்றும் பெருமை..


தாய்மையும் பெண்மை யுமுலகில்  

மேன்மை சேர்த்திடும் இனிமை


வன்மை மிகுந்த ஆண்மை ரசிக்கும்

வண்மை நிறைந்த பெண்மை..


தகைமை சார்ந்த தலைமை காணல்

உவமை தாண்டிய உவகை


ஒருமையில் தன்மையின் பெருமை

உரைத்தல் கேட்பது கொடுமை..


பன்மையில் கூடிக் குலாவுதல்

தன்மையின் நிலையிலும்


இனிமை காணலாமென்ற

பன்மையின் அகலா பெருமை...


 

இரா பெரியசாமி..






Rate this content
Log in

Similar tamil poem from Abstract