கண்கள் மட்டும் இரண்டு..
கண்கள் மட்டும் இரண்டு..
காலின்றி நடக்கும் உயிரினங்கள் சிலவற்றை படைத்த இறைவன்..
இருகால்களோடு ஒடிப் பறந்திடும்
பல பறவைகளையும் படைத்தான்...
ஈரிரு கால்களோடு துள்ளி தாவிடும் விலங்குகளையும் படைத்தான்..
அவனது படைப்பினில்
ஆறு காலினமும் உண்டு..
எட்டு கால்களுடன் வாழும்
சிற்றுயிர்களும் உண்டு...
பத்துக்கும் மேலே
பலகால்கள் இருந்தும்
படர்ந்து ஊர்ந்து செல்லும் சில படைப்புகளைக் கண்டு
பல நாட்கள் வியந்து
போனதுமுண்டு..
கால்களின் எண்ணிக்கையில்
தான் விரும்பிய படியெல்லாம்
படைத்த இறைவன்..
தனது படைப்புகளிலெல்லாம்
கண்களை மட்டும் இரண்டோடு நிறுத்திய காரணம்
ஏனென்று அறியாது
வியந்தது நிற்கிறேன்
அறிந்திடும் காலத்திற்காக
காத்திருக்கிறேன்..
இரா.பெரியசாமி