STORYMIRROR

Ravivarman Periyasamy

Abstract

4  

Ravivarman Periyasamy

Abstract

மானுடம்

மானுடம்

1 min
515

குரு தட்சணைக்கும்

குருவிற்கான தட்சணைக்கும்

இங்கு விளக்கம் இல்லை

மதி அவன் கெட்டு மயங்கி மங்கிப் போனான்

இங்கோ விளங்கா மனிதன் விலங்காய்ப் போனான்

அன்றோ குரு தட்சணை தந்து மானுடம் வாழ்ந்தது

இன்றோ குருவிற்கு தட்சணை தந்து மானுடம் செத்தது

நீண்ட நெடும் காலம் கடந்தும்

நீதி இதுவென்று அறியா மானுடம்

நடு வழியில் தவிக்கிறது

படகொன்று செய்து கரையேற சொன்னால்

படகெதுவோ? கரையெதுவோ?

எனக் கேட்டு மதியிழந்து

ஆமை போல் அடக்காமல்

அறியாமையில் அடங்கி

களைத்து திழைத்து

தனது இறுதிப் பயணத்தை முடித்துக்கொள்ள விழைகிறது

மானுடம்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract