நிலவு முகம்..
நிலவு முகம்..
விண்ணிலிருந்தது விழுந்த
மழைத்துளி தழுவிட
வியர்த்து போன
மரத்தின் இலையின்
பரப்பின் பளபளப்பில்
வானில் மிதந்த
பௌர்ணமி நிலவு தனது
முகத்தின் பிம்பத்தில்
தெரிந்த சாம்பல் நி
திட்டுகளைக் கண்டு
வருத்தமுற்று முகம் வாடி
மெள்ள மெள்ள
தேய்ந்து குறைந்து
முழுவதுமாய்
கரைந்து போனதால்..
விண்வெளியே சோகமாகி
வானில் எங்கும்
சோக இருள் சூழ்ந்ததோ..
அமாவாசை..
இரா.பெரியசாமி..