இலக்குகள்.. இலகுவாக...
இலக்குகள்.. இலகுவாக...
அறிவோடு ஆராய்ந்து
செறிவோடு முடிவெடுத்து
நெஞ்சுரம் குன்றாமல்
அஞ்சுதல் அறியாமல்
அறவழி தவறாமல்
பிறல்வழி போகாமல்
இறுதி வரையிலும்
உறுதியாக முயன்றால்
தடைகளும் விலகிடும்
படைகளும் வழிவிடும்
இலக்குகள் யாவையும்
இலகுவாய் வயப்படும்..
இரா.பெரியசாமி.