நீ என் வாழ்வின் மர்மம்
நீ என் வாழ்வின் மர்மம்


நீ என் மீது வைத்திருப்பது
அனைத்திற்கும் மேலான தாயன்பு
தாயாகும் முன் உனக்கு சேயானேன்
உன் அன்பு கண்டு வியந்து
இத்தனை காலம்
நீயின்றி எப்படி இருந்தேன்
என என்னையே வினவினேன்...
விதி விளையாடி
நம் வாழ்வை
சூன்யமாக்கிய நாட்களில்
உன் துக்கம் மறைத்து
பாசக் கதவு கொண்டு
என் கண்ணீருக்கு தடை விதித்தாய்...😢
நீ பெற்ற பிள்ளைப்போல்
கழுவி குளிப்பாட்டி
உணவூட்டி மறுத்துப் போன
மனத்திற்கு மறு உணர்வூட்டி
மனிதியாய் என்னை நடமாடச் செய்த
என் உயிர் கணவா நீ ஒரு மர்மமான ஆண்தான்...❤️
கனத்தை மனத்தில் தைத்து
குணத்தை முகத்தில் வைத்து
அன்பால் குடும்பத்தை அரவணைக்கும்
ஒவ்வொரு ஆணும்
மர்மமானவர்களே!!!👨