Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Delphiya Nancy

Abstract Inspirational Thriller

4  

Delphiya Nancy

Abstract Inspirational Thriller

அடடா 2021

அடடா 2021

2 mins
243


கருவில் என் குழந்தை குடிகொள்ள

மனம் மகிழ்வில் ஆட்கொள்ள

பல துன்பங்கள் விடைபெற்று

இன்பங்கள் வருகை புரிந்த

மகிழ்வான நேரம்!!!

கொடிய அரக்கன்

கொரோனா வரவால்

வந்தது ஊரடங்கு

நின்றது இயல்பு நிலை!!!

முன்பிழந்த மகவு

நினைவைக் கிள்ள

ஒவ்வொரு நாளும் பயம் கூட

மூச்சுக்காற்றும் முட்டியது முக கவசத்தால்!!!

ஒரு அறைக்குள்ளே

அடைகாக்கும் தீக்கோழியாய்

நானும் அவனும்!!!

பரிசோதனைக்கு

செல்வதற்கே

பல்வகை

பரிசோதனைகள் !!!

வாயைக்கட்டி

வயிற்றைக்கட்டி

சுமந்த காலம் போய்

மூக்கைக் கட்டி

கையைக் கட்டி

சுமந்தேன்

என் உயிரை மறுமுறை!!!

அம்மாவை கொடிய நோய்

தாக்கிய செய்தி

விழுந்தது இதயத்தில் இடியாய்!!!

கருவறையில் குழந்தை

கருவில் சுமந்தவள் மருத்துவமனையில்!!!

நேரில் பார்க்க முடியாமல்

அறைக்குள்ளே அடைந்து

அழுதேன் மனம் நோக!!!

தாயா? சேயா? என

தெய்வம் வைத்த சோதனை

மனதில் ரண வேதனை!!!

செய்தியெல்லாம் செத்துமடியும்

உறவு பற்றியே

அதைக்கேட்டு எரிந்தது

என் மனம் பற்றியே!!!

இனி அம்மாவை பார்க்கவே

முடியாத நிலை வந்தால்?

அறிவு கெட்ட மனமே

நல்லதே நினை

என ஆயிரம் போராட்டம்

ஆழ்மனத்தில்!!!

இனி எங்களை காண முடியாவிட்டால்?

என்ற தாய் மனதின் பயம்

என் மகள நல்லா பார்த்துக்கோங்க

என்ற தழுதழுத்த வார்த்தைகளில்

வெளிப்பட்டது!!!

இந்நிலையை கொடுத்த

இறைவனை கடிந்து

அவனிடமே மன்றாடி

தாயை மீட்டெடுக்க

தவமிருந்தோம்!!!

வயிற்றிலிருக்கும் சிசுவிற்காக

அறை வயிறு உண்டு

கால் தூக்கம் தூங்கி

தாய் முகம் காண ஏங்கி

போனது ஒரு வாரம்!!!

காலையில் எழுந்தால்

நீ எனக்கு சாமி இந்த பூமி

அட எல்லாம் நீதானே என

என் தம்பியின் ஸ்டேட்டஸ்

அதை பார்த்த நொடியில்

கண்ணருவி கரைபுறண்டது!!!

அம்மாவுடன்

மருத்துவமனையில்

ஒற்றைக்கால் கொக்காய்

உண்ணாமல் உறங்காமல்

தாய் மீண்டுவர காத்திருந்தான்!!!

அண்ணணுக்கோ மனைவி பிள்ளைகள்

அக்காவிற்கோ கணவன்

ஆனால் எனக்கு???

எனக்கு நீ மட்டுமே எல்லாமென

அவன் மனம் பட்ட பாடு

தெளிவாய் தெரிந்தது!!!

ஆறுதல் தேறுதல் அளிக்க

வேண்டுதலும்

மருந்துகளும் பலனளிக்க

மறுபிறவியெடுத்து வந்தார்

என் தாய்!!!

அரை உடம்பாகி

மனம் பலகீனமாகி

இருந்தவர்

வளைகாப்பு தேதி

பேரப்பிள்ளை என்றதும்

படிப்படியாய் இயல்பாகினார்!!!

பெருமூச்சு விட நினைக்க

வளைகாப்பு வளையல்

இரண்டு நாள் மட்டுமே

தாக்குப்பிடிக்க

கருவறையையும்

விட்டு வைக்கவில்லை

தண்ணீர் தட்டுப்பாடு!!!

அவசரகதியில்

அறுவைசிகிச்சையில்

அழகு மகன் பிறக்க

லேசானது வயிறும் மனமும்!!!

ஒருவர் மட்டுமே உடன்

என சொல்ல

குளுக்கோஸ் மட்டுமே

உணவென உடல் மெல்ல

நான்கு நாட்கள்

நான்யுகமாய் செல்ல

அன்றும் தாங்கியது

தாய்மடியன்று வேறல்ல!!!

வீடு சென்று அப்பாடா என்றேன்

இனிதான் ஆடும் டப்பா டான்ஸ்

என அறியாமல்!!!

சுமப்பதைவிட

கடினமானது

வளர்த்தெடுப்பது

உணவின்றி

உறக்கமின்றி

கிரங்கிப் போனேன்!!!

எதற்கு அழுகிறான்

எப்போது விழிப்பான்

எப்படி உறங்குவான்

பசிக்கு புசிக்கிறானா?

பாசாங்கு செய்கிறானா?

இது இரவா? பகலா?

என்ன நாள்? கிழமை?

ஆயிரம் வினாக்கள்

மனதை அழுத்த

அனைத்திற்கும்

விடையாய் அவன் புன்னகை!!!

பிஞ்சுமுகம் கண்டு கவலை மறந்தது

பஞ்சு கைகள் பட்டு வலி பறந்தது

மகிழ்வாய் வாழ வழியும் பிறந்தது!!!

இப்படி

கவலையும் களிப்புமாக

கலவையான உணர்வுகளுடன்

தொடர்கிறது 2021.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract