STORYMIRROR

Durga Kannan

Abstract

5  

Durga Kannan

Abstract

அவள் சும்மாதான் இருக்கிறாள்..

அவள் சும்மாதான் இருக்கிறாள்..

1 min
12

அவள் சும்மாதான் இருக்கிறாள்..


மனைவி என்ன செய்கிறாள் எனும் கேள்விக்கு பெரும்பாலான கணவர்களின் பதில்..

'அவள் சும்மாதான் இருக்கிறாள்'


அவள் சும்மாதான் இருக்கிறாள்..

பின் தூங்கி முன் எழுவாள்..

கணவன் குறிப்பறிந்து முன் மொழிவாள்..


ருசி அறிந்து சமைத்திடுவாள்..

அவன் பசி அறியும்முன் பறிமாறிடுவாள்..


உணவளிக்கும் அன்னலட்சுமியும் அவளே..

பிள்ளைகள் பெற்று தரும் சந்தானலட்சுமியும் அவளே..

வீட்டில் யாரும் பிணியுற்றால்,

மருந்து கொடுக்கும் மருத்துவச்சியும் அவளே..

குணமாகி இயல்படையும் வரை சேவை செய்யும் செவிலியும் அவளே...


மாறாய் அவள் பிணியுற்றால்,

வீட்டு வேலைகளுக்கு விடுப்பு கிடையாதே..


குழம்பு ஏதும் வைக்க வேண்டாம்.. ரசமும் அப்பளமும் போதும் என்பான் பெருந்தன்மையாய்..


ஓய்வு வேண்டி படுப்பதுமில்லை..

ஞாயிறு கூட விடுமுறை இல்லை..


பிள்ளைகளை குளிப்பாட்டி சோறூட்டுவது முதல்,

கதை சொல்லி தூங்க வைப்பது வரை..

எல்லாம் அவளது பொறுப்பே..,

அவள் சும்மா தானே இருக்கிறாள்....


அவளுக்கென்று விருப்பங்கள் ஏதும் கிடையாது!

அங்கீகாரம் என்று ஒன்று எப்போதும் கிடைக்காது..!


துயில் குறைத்து, பிணி மறைத்து, பசி விடுத்து, விருப்பம் தவிர்த்து,

தன்னை தவிர பிற எல்லோருக்காகவும் உழைத்து..,


எஞ்சியுள்ள நேரங்களில் 

"அவள் சும்மா தான் இருக்கிறாள்"


Rate this content
Log in

Similar tamil poem from Abstract