ரோஜா திருநாள்!
ரோஜா திருநாள்!
நெருங்கி விட்டாது பிப்ரவரி பதினான்கு
வந்து விட்டது காதலர் திருநாள்
வசுமதி வாட்டமுற்றாள்
பரிசு வாங்க காசு இல்லை!
‘ஏங்கி இருப்பான் என்னவன்
என்செய்வதெ’ன கலங்கினள்!
வந்த காதல் வந்து விட்டது - ஆனால்
வளமான வாழ்வு இல்லை
வருணுக்கும் அதே நிலைதான்
வாழ்த்து அட்டை கூட
வாங்க முடியாத சூழல்
வருத்தமுடன் யோசித்தான்.
‘வேலன்டைன்’ இதை அறிந்தார்
கருணையுடன் அங்கு வந்தார்
அவர்கள் இருவரையும்
அன்புடன் அழைத்தார்
இருவரின் மனம் குளிர
இணைத்துச் சொன்னார்..
சமையலுக்கு சந்தனம் தேவையில்லை
உறங்குவதற்கு மெத்தை தேவையில்லை
கடவுளை வணங்க காசு தேவையில்லை
இனிய காதலுக்கு இரு உள்ளங்கள் போதுமே
அருமை காதலுக்கு அருகாமை போதுமே
உண்மைக் காதலுக்கு உள்ளங்கள் போதுமே!
உணர்ந்தனர் இருவரும்
உள்ளப் பரிமாற்றம்
உவகையுடன் நடந்தது
அன்பு மலர் மலர்ந்தது!