நான் விதைக்கும் விதை!(கவிதை)கோவை என். தீனதயாளன்
நான் விதைக்கும் விதை!(கவிதை)கோவை என். தீனதயாளன்
கனவு காணச் சொன்னார்
அப்துல்கலாம்
அவருக்கு வைப்போம் ஒரு
அன்பு சலாம்!
தூங்கும்போது வருவதல்ல
அவர் சொன்ன கனவு
நாட்டின் உயர்வுக்காக
ஏங்கும்போது வருவது!
அவர் சொன்ன ஏக்கம்…
இளைஞர்களிடையே
ஏற்படுத்த வேண்டும்
பெரும் தாக்கம்!
முடியுமா..
எனும் எண்ணம்
நம்மிலிருந்து
மறையட்டும்
கடுமையான
முயற்சியே
நம்செயலில்
உறையட்டும்!
கனவை நனவாக்க
முயற்சியும் திறமையும்
கருவிகள்!
ஒவ்வொரு தோல்வியும்
நமக்கு வழி காட்ட
ும்
அருவிகள்!
அவ்வப்போது
நம் முயற்சிகளை
தாக்கலாம்
இடிகள்!
அவை
வெற்றிநோக்கி நம்மை
அழைத்துச் செல்லும்
படிகள்!
நம்மால் முடியுமா
எனும் எண்ணத்தை
தகர்த்திட வேண்டும்!
நம்பிக்கை வைத்தால்
வானமே எல்லை என்பதை
உணர்த்திட வேண்டும்!
எனக்குத் தெரியும்…
எனக்குத் தெரியும்…
இது ஒரு அறிவுரைக் கவிதை!
ஆயின்
இதுவே என் முயற்சிக்கு
இதுவே என் திறமைக்கு
இதுவே என் செயலுக்கு
நான் விதைக்கும் விதை!