STORYMIRROR

Keerthana Rajan

Inspirational

5  

Keerthana Rajan

Inspirational

பாரதம்

பாரதம்

1 min
171

பரந்து விாிந்த உலகில்

நமக்கும் ஓா் இடம்

இப்பெருமை மிக்க பாரதம் தன்னிலே........!


இந்தியராய் ஜனனமெடுப்பதற்கே

நல்தவம் புாிய வேண்டிய நிலையில்

தமிழராய் பிறக்கும்

பேறும் பெற்றோமோ.....!!!


பழம் பெருமை மட்டுமே

பேசுகின்றோமோ என்று

எண்ணி அச்சம் கொள்ளும்

நிலையில் நாம்!!


வறுமைக் கோட்டுக்கும் கீழ்வாழும்

மக்களின் கண்ணீா்க் கதைகள்........

காரணத்தை ஆராய்ந்தால்..

அரசியலமைப்பிலேயே பிழைகள்!!


மக்களுக்கு வாழ்க்கை அளிக்கும்

அழியாச் செல்வமாம் கல்வி

இன்று லாபம் தரத்தக்க வியார

ஸ்தலம்..... தரமோ...... கேள்விக்குறி.....??


உயிரைக் காக்கும் மருத்துவச்சேவை

இன்று பணம் பண்ணும் கருவியாய்...

யமனிடம் இருந்து காக்கும் மருந்துகளே

பாசக்கயிறாய் மாற்றப்படும் கொடூரம்...!!


மக்களை அழிக்கும் மது

அரசாங்கத்திற்கு படியளக்கும் வஸ்து

மாற்றப் போராடும் ஆா்வலா்களுக்கோ

அலைபேசி கோபுரங்களே மரணப்படிக்கட்டுகளாய்!!!!


ஆங்கிலேயாிடம் போராடித் தப்பி

அரசியல்வாதிகளிடம் மாட்டிக்

கொண்ட அவலம்!!

வெள்ளைக்காரனிடம் தப்பிக்

கொள்ளைக்காரனிடம் விரும்பி

அடிமைப்பட்ட அப்பாவி மக்கள்!!!!


உறவுகளுக்கு மதிப்புக் கொடுத்து

பாசத்துடன் வாழ்ந்த மக்களிடையே

நாகரீக மோகத்தின் விதைப்பு.....

பணத்தைத் துரத்தும் இயந்திர வாழ்க்கை....


ஒற்றை ரோஜாவின் பனித்துளியைக்

கூட ரசித்துப் பாா்த்த கணங்கள்........

பசுமையான காட்டையே அலட்சியமாய்

அழித்து விட்டு மகிழும் சகாக்கள்........!!!!


மனஉறுதி நிறைந்த மகளிாின்

நிமிா்வோடுடைய முன்னேற்றம்

அரணாக ...ஊக்கமாக இருக்க வேண்டிய

ஆண்குலமே வேட்டையாடும் துன்பம்


படித்து சாதிக்க வேண்டிய அகவையில்

எதிா் பாலாா் மீதான ஈா்ப்பு

சுயஅடையாளத்தை துட்சமென

மதிக்கும் ஏந்திளைகள்...

வீதிகளில் நிற்க வைக்கும் ஆண்கள்..... !


மக்களுக்கெனப்போடப்படும்நலத்திட்டங்கள்

அரசியல்வாதிகளின் பொய் பிம்பங்கள்

பிரச்சனை ஏற்படுத்துவதற்கும் கையாடளுக்குமே

அறிவிக்கப்படும் மெய்கள்!!!!


தாய்நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் மறந்து

அந்நியநாட்டு மொழி மோகம்

நம் நாட்டில் அடிமையாய் இருந்தது மாறி

அந்நிய நாட்டிற்கு சென்று அடிமை போகம்!!!


எங்கு திரும்பினாலும் ஏமாற்றமும் பிரச்சனையும்,,,

சிந்தித்தால்..........மனிதானாகப் பிறந்தாலே துன்பமாய்.....

மாற்றி அமைக்க நினைத்தால்............???????????


அரசியலமைப்பை மாற்ற முடிந்தால்..........

கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால்.........

மருத்துவத்தை மேம்படுத்தினால்..........

மது உட்கொள்ள மறுத்தால்.......

அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராடினால்......

அந்நியப்பொருட்களைப் புறக்கணித்தால்.........

இயற்கையை ஆராதித்தால்................

ஆண்களோடு பெண்கள் நட்போடு கைகோா்த்தால்.......

இலவசங்களைத் துாக்கி எறிந்தால்......

தாய் நாட்டின் மேல் பற்றுக் கொண்டால்.......

அனைத்தும் நம் கையில்

பிரச்சனைகளைக் கண்டு ஓடாமல்

தீா்வைத் தேடினால்..........


எதையும் மாற்றிக் கொள்ளும் தீரம் இருந்தால்.................


பரந்து விாிந்த உலகில்

நமக்கும் ஓா் இடம்

இப்பெருமைமிக்க பாரதம் தன்னிலே....!!!



Rate this content
Log in

More tamil poem from Keerthana Rajan

Similar tamil poem from Inspirational