STORYMIRROR

Uma Subramanian

Inspirational

3.7  

Uma Subramanian

Inspirational

சமர்ப்பணம்💐💐💐

சமர்ப்பணம்💐💐💐

2 mins
281


களைத்துப் போன காயமோ...

இன்னும் சற்று நேரம் என்று கூறும்!

காத்திருக்கும் கடமைகளோ.....

தலை சுற்ற வைக்கும்!

கண் விழித்துக் பார்த்தால்.....

கடிகாரம் காலத்தை உணர்த்தும்!

அலுத்துக்கொண்டே அடியெடுத்து வைத்தால்....

வெளுக்கக் கிடக்கும் பாத்திரங்கள் 

விரண்டோட நினைக்கும்!

வேறு வழியின்றி துலக்கி முடித்து....

வாசல் தெளித்து.... கோலமிட்டு..... 

அடுப்படிக்கு படையெடுத்து...

காபி, டிபன்.... சாதம் சாம்பார்.... 

பொறியல் என அத்தனையும் முடித்து....

அடுத்து என்ன? சிந்திப்பதற்குள்....

அவசரம் அவசரமாக அழைக்கும்!

ஆறிப்போன காபி ஒருபுறம்....

இளைப்பாறி நிற்கும் பிள்ளை மறுபுறம்!

பல்துலக்கி.... குளிக்க வைத்து... 

ஆடை அலங்காரமெல்லாம் முடித்து 

அரை இட்லியை தின்ன வைப்பதற்குள்... 

அவசரம் அரஸ்ட் ஆகிவிடும்!

டப்பாக்களைத் தேடி.... மதிய உணவு....

நொறுக்குத் தீனி எல்லாவற்றையும் அடைத்து...

 தார்மீக கடமைகளைத் தன்னலம் கருதாது 

சரியாக ஆற்றி முடிப்பதற்குள்...

அக்கினியாய் வயிறு எரிந்து வாயு பகவான் உச்சி முதல் பாதம் வரை.....

உலாவி வர.....

வியர்வையாகிய நீர் அங்கமெங்கும் வழிந்தோடும் ! 

நிலமாகிய உடல் ஆகாயத்தில் மிதக்கும்!

 எங்கிருக்கறோம்? என்று எத்தனிப்பதற்குள்.... 

கடிகாரம் எட்டரை எனக் காட்டி எரிச்சலூட்ட....

குளிர்வித்தல் எனும் குளித்தல் சம்பிரதாயத்திற்காக....

அம்மா மணி எட்டு ஐம்பது....

குரல் கேட்டு விரல் சொடக்கும்....

நேரத்தில் அள்ளி வைத்த அத்தனையும் 

வண்டிக்குள் தள்ளி.... வண்டியை விரட்ட....

பக்கத்து வண்டிக்காரன் நம்மை விரட்ட...

மூலை முடுக்குகளில் முந்தி செல்லும் முரடர்கள் ஒரு புறம்!

ஒலியின்றி வந்து ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் நீசர்கள் மறுபுறம்!

அப்பாடா .... என பிள்ளையை பள்ளி வாசலில் இறக்கிவிட்டு.....

சீட்டில் நேராய் உட்கார்ந்து ஆவிபறக்கும் வேளையில் தான்....

ஆறிப்போன காபி நினைவில் நிற்கும்! 

வழியின்றி வண்டியை விரட்டி பள்ளிக்கு சென்று ....

வந்து விட்டேன் என வருகையைப் பதிவு செய்து...

வழிபாடு கூட்டத்தை ஒருவழியாய் நிதானமாய் நடத்தி முடித்து....

வந்தவன்.... வராதவன் கணக்கையெல்லாம் முடித்து.... 

என்னடா ஹோம் ஒர்க்கையெல்லாம் முடித்து விட்டீர்களா? என்றால்....

வாயைப் பிளக்கும் பிள்ளைகள்!

எப்போது கூறினீர்கள் என்பது போல....

தொண்டைக் கிழிய கத்தியது வீணோ? 

மண்டை வெடிப்ப

து போல் தோன்றும்!

ஹோம் ஒர்க்கை வாம் அப்பாக செய்யச் சொல்லி விட்டு......

டப்பாவில் அடைத்திருந்த உணவை 

அவசரம் அவசரமாக விழுங்கி வயிற்றில் அடைக்க...

முதல் பாட வேளை முடிந்து விடும்!

இட்டக் கட்டளைகளைத் தொடராது....

விட்டக் கதைகளைத் தொடரும் பிள்ளைகள் ஒரு புறம்!

ஆயிரம்.... ஆயிரம் அழைப்புகள்....

அலுவல்கள்...... சந்தேகங்கள் ஒரு புறம்!

அனைத்தையும் சமாளித்து.....ஸ்கூல் ஒர்க்.... ஹோம் ஒர்க்.... டீச்சிங்.. கோச்சிங்....

எல்லாவற்றையும் ஊதித் தள்ளி....

விழிகள் சோர்ந்து போக......

அப்பாடா...... நிதானிப்பதற்குள் மணி ஒலிக்கும்!

உணவு உண்டு..... இரண்டு மணி நேரம்.....

இரைப்பையைக் கூட தாண்டிராது! 

அடுத்த உணவுக்கான நேரம்!

அப்புறம் என்ன செய்ய?

உன்னால் முடிந்ததோ? இல்லையோ?

என் கடன் உள் தள்ளுவது.... பிற்பாடு உன் பாடு

மொத்தத்தையும் உள்ளே தள்ளி முடிப்பதற்குள்...

வயிறு டென்ஷனாகி நம்மை டென்ஷனாக்க...

எல்லா டென்ஷனுக்கும் ஃபஃங்ஷன் கொண்டாடிவிட்டு....

பள்ளிக்கு பை சொல்லி விட்டு பையை எடுக்கும் வேளையில்....

ஆயிரம் ஆயிரம் தடைக்கற்கள்!

அத்தனையும் படிக்கற்களாக்கி....

பீறிட்டு ஓடும் வண்டிக்கும் ...... பி.பி.க்கும். 

பிரேக்கைப் போட்டு அப்பாடா...

வீட்டுக்குள்ளே நுழைந்தால்....

ஏக்கத்தோடு காத்திருக்கும் எச்சில் பாத்திரங்கள்!

வெளுக்கக் காத்திருக்கும் அழுக்குத்துணிகள்!

கொட்டிக் கிடக்கும் குப்பைகள்!

கழுவி... தள்ளி.... வெளுத்து முடிப்பதற்குள்....

வெளுத்து வாங்கிடும் கொசுக்கூட்டங்கள்! 

ஆத்தாடி காத்தாடியாய் சுழன்று பம்பரமாய் சுற்றிய உடம்பு!

ஏங்கிடும் உடம்பு ஓய்வுக்கு! மனம் ஓடிடும் அடுத்த ஆய்வுக்கு!

இரவு என்ன சமையல்?

அதற்குள் பிள்ளைகள் அழைத்திடும் முதுகு சாய்வுக்கு!

என்னடா இறைவா சோதனை ? 

அலுக்கும் வேளையில் ....பிள்ளை போதிக்கக்  கூப்பிடும் !

 மனமோ வாதிக்க நேரமில்லை என வலியைப் பதுக்க....

வயிறோ உலையாய் கொதிக்க!

பொறுப்பதற்கில்லை புறப்படுவோம் இனி சமைக்க!

இடையிடையே பிள்ளைகள் சந்தேகங்கள் கேட்க!

இப்படியே......ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்க!

ஒவ்வொரு பெண்ணுக்கும்.....

எத்தனை எத்தனை தான் மனவலிமை சவால்களை சகிக்க! 

இரண்டு எஜமானன்களுக்கு ஒருவனாலும் ஊழியம் செய்ய முடியாது!

இரண்டல்ல.... எத்தனை எத்தனை எஜமானன்களுக்கு ஊழியம்!

குடும்பத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணம் செய்யும் பெண்களுக்கு....

என் சமர்ப்பணம்! 

 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational