படரும் தீ
படரும் தீ


வாணலிக்கு மேல் படரும் தீ
வயிற்றுக்குள்ளோ பசித்தீ
காற்றிலே மிதந்து வந்து
நாசியினுள்ளே நுழைந்து
வாசணையினால் கவர்ந்து விடும்
மசாலா வாசம்!
சாலையோரக் கடைகளிலே வீசும்
பச்சை சிவப்பு கருப்பு
வண்ணம்!
பார்த்தவுடனே சுவைக்க எண்ணும்!
டொய்ங் டொய்ங்
டர்ங் டர்ங்
கிளறும் சப்தம்
காதுகளில் வந்து பேசும்!
வா! வா!
வந்து வாங்கி விடு!
விரல்களால் நீவி விடு!
கரங்களால் எனை
வாரி அணைத்திடு!
தட்டுச் சோற்றை வாயில் திணித்திடு!
சுவையின் அழகில் திளைத்திடு!
பரோட்டா குழம்பு ஒரு பக்கம்!
ஆஃப் பாயில் ஆம்லெட் மறுபக்கம்!
ஃபாஸ்ட் ஃபுட் கடையெல்லாம்
ஃபாஸ்ட் ஆகத்தான் நடக்குது!
மாலை நேரம் மக்கள் கூட்டம்
முண்டியடித்து கிடக்குது!
கண்டதையும் தின்னுபுட்டு
உடம்பு கனத்து போய் நிக்குது!
காலைத் தூக்கி நடக்கக்
கூட மூச்சு வாங்கி போகுது!
கலர் கலரா மருந்துகளை
வேளை தோறும் தின்னுது!
உடல் உழைப்பை துறந்து புட்டு
ஓய்ந்து கிடக்கப் பார்க்குது!
உண்மையை சொன்னா இங்கே
உறுமிக்கிட்டு முறைக்குது!
உழைத்து வாழ
உலக மக்கள் மறக்குது!
உணவை மருந்தாக்க
உள்ளபடியே வெறுக்குது!
புதுப்புது வியாதி வந்து
ஹாஸ்பிடலில் மடியுது!
அற்ப ஆயுசில் பாவி உசுரு பறக்குது!