STORYMIRROR

Manimaran Kathiresan

Inspirational

4  

Manimaran Kathiresan

Inspirational

நெற்கதிரெனும் மகள்

நெற்கதிரெனும் மகள்

1 min
438


நன்செய் நிலமும் நம்பிக்கை பெற்றிடும்

புன்செய் நிலத்திலும் புத்துயிர் நிறைந்திடும்

மண்வளம் காப்பில் மகத்துவம் கிடைத்திடும்

கண்போல் பேணிக்காக்கும் கடவுளின் ஊழியனே


ஆடுமாடு வளர்ப்பதிலும் ஆளுமை நிறைந்திருக்கும்

காடுமேடு போனாலும் காலத்தோடவே இவைதிரும்பும்

குடும்பத்தில் ஒருவராய் குழந்தைகளும் நேசிக்கும்

இடும்பைகள் அண்டிடுமோ இவன்சூழ் உலகிலே


விளைந்த நாற்றை விசாலமாய் நடவுசெய்து 

களைகள் யாவையும் கருத்துடனே களையெடுத்து 

தழையும் நாற்றில் தண்ணீருக்காய் சீரமைத்து

உழைப்பையே உரமாக்கி உழவையும் தக்கவைத்தானே


வளர்ந்துவரும் நெற்பயிரை வரவேற்கும் பாட்டமைத்து

களத்திலே வேலையை கனியமுதாய் இவன்சுவைத்து 

ஊருக்கே பசியாற்றும் ஊன்றுகோலாய் இவனும்

பார்போற்றும் விவசாயி பாரதத்தின் தலைமகனே


குலைகுலையாய் நெற்பயிரும் குத்தவைச்சு உக்காந்தாச்சு தலைகுனிந்து நெற்பயிரும் தயாராகி நின்னாச்சு

அறுவடை செய்துவைத்து அத்திருநாள் உறுதியாச்சு 

இறுதிவரை நன்மகளாய் இவளையும் வளர்த்தாளே


நன்மகளை பெற்றாலும் நன்மதிப்பே கிடைத்திருக்கும் 

நின்மகளை வளர்த்ததால் நிறைந்திருக்கும் செல்வமும் 

என்மகள்தான் நீயுமே என்னுடைய அங்கமும்

தன்மகளென போற்றுவேன் தகப்பனாய் ஆனதாலே


பிறக்கும் தைத்திருநாளில் பிறந்திடும் நந்நாளாம்

வறட்சியும் மறைந்தே வளர்ச்சியும் பெருகுமாம்

வழிகளும் காட்டுமாம் வளங்களும் ஈட்டுமாம்

செழிப்புடன் நீளுமாம் செந்தமிழின் தைத்திருநாளே



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational