2022க்கு நன்றி சொல்லி விடைபெறுதல்
2022க்கு நன்றி சொல்லி விடைபெறுதல்


முடியவே போகு மாண்டாம்
முயற்சியில் சிறந்த ஆண்டாம்
முடிவிலே மாற்றம் தந்தும்
முயற்சியை வளர்த்த ஆண்டாம்
படிப்பினை தந்த தாண்டாம்
பயிற்சியை வளர்த்த ஆண்டாம்
கடினமே வாழ்வில் வந்தும்
கவலையை மறந்த ஆண்டாம்