மௌன சப்தம்
மௌன சப்தம்
ஒன்றில்லாத ஒன்றே
உருவெடுத்தது பல ஒன்றாய்...
உருவெடுத்த ஒவ்வொன்றும்
தனித்துவமே ...
தன்னிகரில்லை தரணியிலே...
அருவத்தில் மறைந்தும்
உருவத்தில் தெரிந்தும்
அருவ உருவ வடிவில்
அறிவாய் மலர்ந்தும்...
அவ்வறிவில் நானெனும்
அகந்தை கைக்கொண்டு
தன்னை மறைத்தும்...
அளப்பரிய ஒண்ணா அறிவின்
விசாலம் கொண்டு...
தன்னை விரித்தும்...
தன்னிலே தன்னை முகிழ்த்து
தன்னிலே தன்னை சுகித்து
தன்னிலே தன்னை கரைத்து
தன்னிலே தான் அடங்கும்
தன்னிலை அறிந்தோர் உணரும்
தனக்கு உவமையில்லா
அருளை
ஆனந்த வடிவை
பேராற்றலை
அன்பை
எடுத்தியம்ப சொற்களேது?!
எங்கும் நிறை மௌன சப்தமே...
கரைகிறேன் உன்னுள்...பெருங்
கடலினுள் ஒரு சிறு நீர்த் துளியாய் !...
ஒன்றுமில்லா ஒன்றாய் நானும்
ஒன்றிட மாட்டேனா?!!!
நன்றியுடன்...
MK 🎶🕊️✨