உயிர்க் காதல்
உயிர்க் காதல்


ஓடி வந்து கால்களை
கட்டிக் கொள்ளும்
வெண் நுரை அலைகளென
முட்டி மோதும் நினைவுகள்
உள்ளக் கடலினுள்
பொங்கிப் பொங்கியே
வழிந்தோட -
நினைவுகள் கனவுகளாய்
கண்களின் வழியேயும்
நாணம் கலந்த
குறுநகையாக இதழோரமும்
எட்டிப் பார்த்து இழையோட
கண்ணில் விதையாய் விழுந்து
உள்ளமதில் விருட்சமாய்
விரிந்து பரந்தே கிடக்கும்
காதல் - என்றென்றும்
உயிர்ப்புடன் வைத்திருக்கும்
மண்ணில் வாழ்வு தனையே !