STORYMIRROR

Senthilkumar B

Abstract

4  

Senthilkumar B

Abstract

கண்ணாடி சுவர்களுக்குள் தேவதை

கண்ணாடி சுவர்களுக்குள் தேவதை

1 min
151

கண்ணாடி பேழைக்குள் 

கை அளவு தேவதை அவள் 


தந்தையின் நெஞ்சினில் மட்டுமே நடை பழகிய 

பிஞ்சு பாதங்கள் 

அந்த கண்ணாடி சிறைக்குள் 

சற்று தள்ளாடியே நடக்கின்றன 


அம்மா எங்கே ? அப்பா எங்கே ?

தன்னோடு தவழ்ந்து வரும் தானியங்கி பொம்மைகள் எங்கே ?

வீடு எங்கே ?

விரல் நுனியில் விளையாட்டு காட்டும் திறன் பேசி எங்கே?

டோரா எங்கே ? எல்சா எங்கே ?

ஸ்னோவ்மன் காட்டி சோறூட்டும் பாட்டி எங்கே ?


விழிகளில் பல வினாக்களை தேக்கி வைத்து 

வெற்று காகிதமாய் சுற்றி எங்கும் பார்க்கிறாள் 

"wuhan" நகரத்தின் "பல சிறப்பு மருத்துவ மனையை" 

கண்ணாடி கூண்டுக்குள் கைகளை துலாவிய படி 


முன்னோக்கி சென்றேன் 

முக மூடிக்குள் என் மூச்சு காற்று மோதிய படி 

ஆம் ! நான் ஒரு மருத்துவன் 


குட்டி தேவதையின் அருகில் 

மண்டியிட்டு மழலையின் முகம் பார்த்தேன் 

கொட்டி சிதறினாள் பூஞ்சிரிப்பை 

கூறியது அவளின் பெரும் தவிப்பை 

சொர்க்கத்தின் சில நொடிகள் என்னோடு சேர்ந்தன 


கண்ணாடி வழியே கண்களில் பரி பாஷை 

எனை கண்டதும் கை உயர்த்தி தூக்க ச்சொன்னது அவள் ஆசை 


முன்னேற முடியாமல் முடவன் ஆனேன் 

பிஞ்சு கரம் கூட தொட முடியாமல் பித்தன் ஆனேன் 

அடுத்த கணம் அவளை காண துணிவின்றி 

அப்படியே நான் மரணித்து போனேன் 


ஆம் !! "Corona" நஞ்சொன்று 

கொஞ்சம் கொஞ்சமாய் அவள் உயிரை கொய்ய 

மரணம் ஒன்று அன்றி வேறொன்றும் நிகழ முடியாத 

இந்த தருணம் இருந்தாலென்ன !! நானும் இறந்தாலென்ன !!


நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே 

ஒற்றை மெழுகு வர்த்தியாய் இந்த தேவதை !!!


என்னால் தாங்கவே முடிய வில்லை இவள் தேய்வதை !!!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract