மாலையும் மழையும்
மாலையும் மழையும்
மேகத்துக்கு குளுருதாம்
காத்துப் போத்தியதாம்
சும்மா இருக்குமா வானம்
அழுதுக் கொட்டித் தீர்த்ததாம்
மழையாய்....
மேகத்தாயிடம் பிரிந்த
மழைத்துளிப் பயந்ததாம்
எங்கு விழப் போகிரோமென்று
நாமிருவரும்
முட்டி மோதிக்கொண்டு
அதைப்பிடித்து விளையாட ஆசை
அவ்வப்பொழுது
வண்ணத்துப் பூச்சியையும்
என் மடியின்மீது வைத்து
உன் கண்ணில் பார்க்க ஆசை
உனக்காக தாழம்பூவை
சாரலில் நனையாமல்
பொத்திவைக்க ஆசை
உன்னைக் காணவில்லையென்று
நான் அழுத கண்ணீர்
தெருத்தண்ணியோடு
உந்
தன் வீட்டு வாசலில்
நீ பார்க்கும்வரை
தேங்கி நிற்க ஆசை
மொட்டை மாடியில்
காய்வதற்ககுக் காத்திருந்த
உந்தன் தாவணியும்
எந்தன் சட்டையும்
ஒரே கொடியில் காய்ந்து
தஞ்சமடைவதற்கு ஆசை
மழையில் நான் விட்ட
காகிதக் கப்பலில்
யார் கண்ணிலும் படாமல்
உனை ஊர்சுற்றிக்
காமிக்க ஆசை
நீயும் என்னைப் போல்
இத்தனை
ஆசைகளையும் வளர்த்துக்
கொண்டிருக்கிறாய் என்று
தெரிந்த மழையும் ஒரு
ஒரமாக வேடிக்கைப் பார்ப்பதை
நானும் வேடிக்கையாய்
பார்க்கிறேன் ....