கல்லூரிக் கனாக் காலம்
கல்லூரிக் கனாக் காலம்


ஊரொன்றும் தெரியாது
வரலாறு தெரியாது
பார்த்த முதல் நிமிடத்திலேயே
நெஞ்சை அள்ளும் பரவசம்
பெயரை உச்சரித்தது
அதுவே முதல் தடவை அவ்வளவுதான்
அதன் பிறகு மாமன்,மச்சி, மச்சான்
என்று தொப்புள் கொடி உறவைப் போல
அகிலம் கேட்கும் வரை
உச்சரித்ததுதான் மிகப்பெரிய சுவாரஷ்யம்
இப்படி அழைத்தாலும் எனது தங்கை
அவனுக்கு தங்கையாகத்தான் இருந்தாள்
குடும்ப விழாக்கள் என்றால்
இறங்கி வந்து கழிப்பறை கழுவதிலிலிருந்து
கச்சேரி வரை அத்தனையும்
கைசேர்த்து பாசத்தோடு செய்யும்
பண்பு இங்கு மட்டுமே
ஒரு வகையில் ரேஷன் கார்ட்லேயும்
இவன் பெயர் சேர்க்க பரிந்த்துரைத்ததுதான்
நான் செய்ய கூடியக் நட்பின் அடையாளம்
என்று சொல்வதில் ஒரு கர்வம் உண்டு
சொந்தம் கொண்டாட
ஆரம்பித்துவிட்டோம்
எச்சில் தட்டில் சோறு
உள்ளாடையைத் தவிர அனைத்தையும்
பாகுபாடின்றி மாற்றி உடுத்தினோம்
சாதி மத போதனைகள் என்று
எந்த விதமான வேறுபாடில்லை எங்களுக்குள்
பத்துக்குப் பத்து அறையில்
பத்து பேர் பத்து மணி நேரம் படுத்துறங்கினோம்
ஆனால் ஒரு துளி கூட இரவில்
தூக்கம் கலைந்த சரித்திரம் இல்லை
காசு இருக்காது ஆனாலும்
மருத்துவமனைக்கு அழைத்து சென்று
வைத்தியம் பாத்துத் திரும்ப
வரவைத்து விடுவார்கள்
அடுத்த நாள் வகுப்புக்கு செல்ல
கட் அடித்து சினிமாவுக்கு சென்று
வந்தாலும் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க
அவன் எனக்காக பழியை சுமந்து
பல நாட்கள் கஷ்டப்பட்டதுண்டு
விடுமுறை என்றதும் சேர்ந்து
சுற்றிவிட்டு நாட்களை கழித்துவிட்டு
திரும்ப வரும்போது கையில்
ஒரு ரூபா கூடா மிஞ்சி இருக்காது
போட்டிருக்கும் மோதிரத்தை அடகு வைத்து
கட்டணம் செலுத்திய நாட்கள் உண்டு
ரத்தமும் சதையுமாக இருந்த பயணம்
ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று தெரிந்தும்
வாழ்ந்த நாட்களை எண்ணி
பார்க்கும்போது அருவி போல்
கொட்டுகிறது கண்ணீர்
சிரித்த விநாடிகள் கலாய்த்த நொடிகள்
சுற்றித் திரிந்த இடங்கள் என அத்தனையும்
படம் போட்டு காண்பிக்க ஒரு கனம்
எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
பாடித் திரிந்த பறவைகள்
தன்னந்தனியே பிரிந்து செல்கிறது மனமில்லாமல்
காலத்தையும் சூழலையும்
படுகொலை செய்து விடுவோமா
என்ற எண்ணம் ....