முதலாம் வகுப்பு ஆசிரியர்
முதலாம் வகுப்பு ஆசிரியர்
பட்டாம்பூச்சி சிறகடிக்க
பள்ளிக்கூடம் நான் சென்றேன்
பாரெல்லாம் சொந்தமென
பட்டாம்பூச்சி நினைக்க
பள்ளிப்பாடம் இனிமையென
என்மனம் நினைக்க
பள்ளிக்கூடம் நான் சென்றேன்
அ எழுத அழுது நின்றேன்
ஆள்காட்டி விரலை மடக்கி
எழுத வைத்தார் ஆசிரியர்
அன்றைக்குத்தான் நான் நினைத்தேன்
அடுத்த அம்மா இவரென்று
அன்போடு அறிவையும் கற்றேன்
அளவில்லா பண்பையும் கற்றேன்
ஊர்போற்ற நானும் உயர்ந்தேன்_என்னை
வளர்த்த பள்ளிக்குச் சென்றேன்
மாறி இருந்தது அனைத்தும்_ஏனோ இன்னும் மாறவில்லை_என் ஆசிரியரின் இருக்கை மட்டும்!