கொரோனாவிற்கு நன்றி
கொரோனாவிற்கு நன்றி
கொரோனாவே!
உழவனையும் உழவுத் தொழிலின் அவசியத்தையும் உணர வைத்தாய்!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற எம்மக்களுக்கு அவ்வப்போது சமூக விலகல் அவசியம் என கற்றுத் தந்தாய்!
ஒவ்வொரு மனிதனும் தன்னையே உணரும் தன்மை வளர வைத்தாய்!
தாய் தந்தையரைப் பேண வழி வகுத்தாய்!
தன் குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வழி தந்தாய்!
இயற்கையோடு வாழ வைத்தாய்!
தூய்மையின் அவசியத்தை உணர்த்திச் சென்றாய்!_இறுதியாக
இந்த பூமியை மாசுபாடற்ற தூய்மை உலகமாக மாற்ற வழி செய்தாய்!