என் ஆசிரியர்
என் ஆசிரியர்


கல்விக்கு உருவம் தந்து
வாழ்வுக்கு ஏற்றம் தந்து
மூளைக்கு ஆற்றல் தந்து
கண்ணுக்கு இன்பம் தந்து
செவிக்கு விருந்து தந்து
உயர்வுக்கு வடிவம் தந்து
எனக்கு வாழ்வு தந்து
அன்புக்கு வேராய் இருந்து
என் உள்ளம் இணைந்து
நானாய் நீ மலர்ந்து
என் தோட்டத்தில் உதித்து
தன் கதிர் உதிர்த்து
மேம்படுத்தும் ஆதவன் நீ
என் ஆசிரியம் நீ,.........
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!!!!!