ரசி ,,,.... ருசி,.....
ரசி ,,,.... ருசி,.....


ரோஜா பனித்துளியை
ரசிப்பதில்லை
தாமரை நீர்த்துளியை
ருசிப்பதில்லை
மானுடா!
நீ
வாழ்வை ரசித்திடு - பின்
வாழ்வு ருசிக்கும்
தானாய் உன்னிலே! .......
ஆம்,
ரசித்தல்
உன்னில் நீயே மகிழ்வது
ருசித்தல்
உன்னால் பிறர் மகிழ்வது
வாழ்வை ரசித்திடு - உன்
வாழ்வையே ருசித்திடு!