STORYMIRROR

Manoharan Kesavan

Inspirational

5  

Manoharan Kesavan

Inspirational

நான்

நான்

1 min
492

நடமாடும் அணுக்களின் கூட்டம் நான்...

உயிர் எனும் மாய மறை பொருள்

ஆட்டுவிக்கும் கூட்டியக்கம் நான்...

அன்ன பிராண மனோ விஞ்ஞான

ஆனந்த மய சேர்க்கை நான்...

இயற்கையின் பல்வேறு படைப்புகளில் உச்சம் நான்...

உணவை ரத்தமாக மாற்றும் உயிர்வேதியல் தொழிற்சாலை நான்...

வடிவாம் இவ்வுலக வண்ணத்தை விழியால் நோக்கும் பேறு பெற்றவன் நான்...

எண்ணமெனும் அலையை ஈர்க்கும் ஆர்ப்பரிக்கும் நடமாடும் இயற்கைக் கோள் நான்...

அளப்பரிய செய்திகளை அனுபவங்களை பொதிந்து வைத்திருக்கும் நினைவுக் களஞ்சியம் நான்...

கற்பனைத் திறத்தால் காலத்தையும் தாண்டிச் சிந்திக்கும் காட்சி ஊடகம் நான்...

குணங்கள் வாசனைகள் உணர்ச்சிகள் உணர்வுகள் புத்தி அறிவு என

தத்துவங்கள் பலவற்றால் ஆனவன் நான்...

நான் எழுந்த இருப்பின் இருப்பை உணர முளைத்து எழுந்தவன் நான்...

நான் என்பது அணுவானால்...நான் காண்பது யாவும் நான் தானே...!


நன்றியுடன்...MK🕊️🎶



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational