Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

S. Meena

Inspirational

4.4  

S. Meena

Inspirational

எல்லாம் அழகு

எல்லாம் அழகு

1 min
632


பேசாமலே பேசிடும்

விழிகள் அழகு...

பேசும்போது அசைக்கும்

விரல்கள் அழகு..


இடையிடையே மலரும்

புன்னகை அழகு...

எப்போதாவது எட்டிப்பார்கிற

கோபம் அழகு..


ஏங்க வைத்திடும்

மௌனம் அழகு..

எதிர்பார்ப்பு இல்லாத

அன்பு அழகு...


வார்த்தையில் வெளிப்படும்

உண்மை அழகு..

வாழ்வில் பின்பற்றும்

நேர்மை அழகு..!


தோற்றத்தில் எப்போதும்

எளிமை அழகு..

தோல்வியில் தட்டிக்கொடுக்கும்

கரங்கள் அழகு...


அடிக்காமலே அடக்கும்

ஆளுமை அழகு..

அழும்போது அரவணைக்கும்

அரவணைப்பு அழகு..


அழகு! அழகு!

எல்லாம் அழகு!

அன்பு நிறைந்த

உள்ளத்தில்...!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational