பயணம்....
பயணம்....


பாதி தூரம் கடந்தாகிவிட்டது.....
எல்லாம் இருந்து சில தூரம்...
எதுவும் இல்லாமல் சில தூரம்...
வெற்றிகளோடு சில தூரம்...
தோல்விகளோடு சில தூரம்....
களிப்புகளோடு சில தூரம்...
கண்ணீரோடு சில் தூரம்....
எதிர்பார்ப்போடு சில தூரம்...
எதிர்பார்பின்றி சில தூரம்...
நம்பிக்கையோடு சில தூரம்..
நம்பிக்கை தொலைந்து சில தூரம்....
குறிக்கோளோடு சில தூரம்...
குறிக்கோளற்று சில தூரம்...
இலக்கோடு சில தூரம்...
இலக்கின்றி சில தூரம்....
பிடிப்போடு சில தூரம்..
பிடிப்பின்றி சில தூரம்...
இஷ்டப்பட்டு சில தூரம்..
கஷ்டப்பட்டு சில தூரம்...
கோவங்களோடு சில தூரம்...
சமரசங்களோடு சில தூரம்...
தீர்க்கமாய் சில தூரம்...
விட்டேத்தியாய் சில தூரம்...
அமைதியாய் சில தூரம்..
கோவங்களோடு சிலதூரம்...
அன்போடு சில தூரம்...
ரெளத்திரத்தோடு சில தூரம்...
காதலோடு சில தூரம்..
காயப்பட்டு சில தூரம்..
புன்னகையோடு சில தூரம்...
இறுக்கத்தோடு சில தூரம்...
நல்லவர்களோடு சில தூரம்..
நயவஞ்சகர்களோடு சில தூரம்..
விசுவாசங்களோடு சில தூரம்..
துரோகிகளோடு சில தூரம்..
ஆசையோடு சில தூரம்..
வெறுப்போடு சில தூரம்...
வழி துணையோடு சில தூரம்...
தன் துணையோடு சில தூரம்...
இன்னும் சில தூரம்தான். .....
கடந்து விடலாம்..........