எத்தனை நேரம்
எத்தனை நேரம்


எத்தனை நேரம் தான் சுவரோடு மட்டும் பேசுவது........
இலைகளும்...தளிர்களும்..மரங்களும்.. பூக்களும் சம்பாசனைக்கு காத்திருக்கும் போது.....
எத்தனை நேரம் தான் தன்னோடு பேசுவது.... காகங்களும்... நாய்களும்...பூனைகளும் ..
பிரியங்களுக்கு காத்திருக்கும் போது....
எத்தனை நேரம் தான் கைபேசியில் உலவுவது ..
திண்ணைகளும் சாலைகளும்..பழகிய இடங்களும் வியந்த கட்டிடங்களும் பார்வை பரிமாற்றத்துக்கு காத்திருக்கும் போது...
அச்சமில்லா நாளாக... விடிந்துவிட்டு போகட்டுமே...
வரும்பொழுதுகள்......
கற்பனைகளில் கரைவதற்கு முன்.,..