ஆசிரியம் வாழியவே!!!
ஆசிரியம் வாழியவே!!!


ஆசிரியமே வாழியவே!!!
ஆசான்கள் நாட்டின்
புதையல்கள்
ஆசிரியத்துவம் வாழ்வின்
கொடைகள்
ஆசிரியமே வாழியவே!!!
ஆர்வமாய் கற்றுத்தந்தாய்,..
ஆசீரை அள்ளித்தந்தாய்,..
ஆன்மீகத்தின் முன்மாதிரியானாய்,.
ஆளுமையின் வழிகாட்டியானாய்,..
ஆணவமின்றி ஒன்றித்தாய்,..
ஆசைக்குரிய ஆசானானாய்,..
ஆர்வமுடன் பள்ளிவந்தாய்,..
ஆத்திரமின்றி செயலாற்றினாய்,..
ஆறுதலின் பிறப்பிடமானாய்,..
ஆதரவின் உச்சமானாய்,..
ஆதாரத்துடன் நிரூபித்தாய்,..
ஆராய்ச்சியின் துவக்கமானாய்,..
ஆகாயத்தின் உயரமானாய்,..
ஆலோசனையின் மந்திரியானாய்,.
ஆபத்தின் அந்நியமானாய்,..
ஆழ்சிந்தனையின் முதலானாய்,..
ஆகமொத்தம் நானானாய்,..
ஆசானே ஆக்சிஜனானாய்,..
ஆசிரியமே வாழியவே!!!
ஆசிரியர்கள் மண்ணின்
தேவதைகள்
ஆசிரியத்துவம் இறைவனின்
பரிசுகள்
ஆசிரியமே வாழியவே!!!