Be a part of the contest Navratri Diaries, a contest to celebrate Navratri through stories and poems and win exciting prizes!
Be a part of the contest Navratri Diaries, a contest to celebrate Navratri through stories and poems and win exciting prizes!

Karthikeyan Karthikeyan

Inspirational


4  

Karthikeyan Karthikeyan

Inspirational


சமூக அவலங்கள்

சமூக அவலங்கள்

2 mins 303 2 mins 303

மனிதத்தை மறக்கடிக்கும் மதம் ,

ஓற்றுமையை ஒழிக்கும் ஜாதி ,

இந்தியாவின் ஆரோக்கியத்தை

அழிக்க வந்த மருந்துகள் இல்லாத

வைரஸ் வியாதிகள் !


மதம் பிடித்தவர்கள் ,

மது குடிகிறார்கள்,

பிறகென்ன ,

மனிதம் தூங்கிவிடும்

மிருகம் பேச ஆரம்பிக்கும் ,

இரவு முழுவதும்

இவன் வைத்ததுதான் சட்டம் ,

இந்தியாவின் பொருளாதார ஏற்றமும்

இரக்கமும் இதனால் உண்டு !


கரும்பு தின்ன கூலி போதவில்லையாம் ,

இன்னும் கொக்கரிக்கிறார்கள் புது மாப்பிள்ளைகள் ,

கொடுத்ததெல்லாம் கொடுத்து கொடுத்து

பெற்றவர்கள் கழுத்து இருகும் வரை ,

வலுவாக இருக்கிறது தாலிக்கயிறு !


வரம்புகள் மீறிய பக்தி ,

போளிசாமியார்களின் புதுபுது அவதாரங்கள் ,

நெறி தவறிப்போன பக்தி மார்க்கம் ,

கௌரவ பிச்சைகாரர்களின் இறுதி அவதாரம் !


காப்பி கொட்டை தூளுக்குள் ,

புளியங்கொட்டை தூள் ,

சக்கரைக்குள் ரவை ,

அரிசிக்குள் கல் ,

தண்ணீருக்குள் பாலை தேடும் வினோதம் ,

கலப்பட உணவால் கதிகலங்கும் மக்கள் !


வாழவைக்கும் மருத்துவம் ,

சாகடிக்கும் போலி மருந்துகள் ,

சில பணப் பேய்களின்

அதிரடி வளர்ச்சி வைத்தியம் ,

வயித்துவலிக்கு மாத்திரை சாப்பிட்டவன்

மூளை கலங்கி செத்துப்போகிறான் ,

காலாவதி மருந்துகள்

மனிதனையும் காலவதியாக்குது !


பரந்த உலகில்

பெண்களின் சிறிய உலகம் சின்னத்திரை ,

சீரியல் படங்களால்

சீரழிந்து போகும் கலாச்சாரம் ,

மனிதர்களை மறக்கடிக்கும்

மாயத்திரை !


கல்வி இன்று மனிதனை

மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக

உருவாக்குகிறது

அல்லது ,

பணம் ஈட்டும் கருவியாக படைக்கிறது ,

அனுபவ பாடங்கள் ,

நல்ல கதைகள் ,

புத்தகங்களோடு சரி ,

ஒழுக்கங்கள் கட்டுபாடுகள்

காணமல் போய்விட்டது பள்ளியின் பீஸ் லிஸ்டில் !


தேடலில் தொடங்கி ,

காமத்தில் முடியும் காதல் ,

கண்டவனையெல்லாம் கணவனாக நினைத்து ,

கற்பிழந்து , களையிழந்து ,

கரும்பு சக்கையான பின்பு ,

திரும்பி கடந்தகாலத்தை வேடிக்கை

பார்க்கிறது இளமை ,

எல்லாம் வயசுக்கோளாரின் நாடகம் !


மனிதநேயம் ,

மெத்தை வீடுகள் கட்ட

கூரைகளை எரித்துப்பார்க்கிறது !


சுதந்திர காற்றையா சுவாசிக்கிறோம் ,

இல்லை இல்லை

காற்றிலும் , நீரிலும்

சோற்றில் கூட விஷமல்லவா ,

100 வயதை 50 க குறைத்துவிட்டதே

அதீத விஞ்ஞானம் !


புத்தக பைகள் சுமக்க வேண்டிய கைகள் ,

கூலி வேளையில் கொத்தடிமைகளாய் ,

இந்தியாவின் எதிர்கால தூண்கள் ,

செங்கல் சூலைகளிலேயா கரைந்து போவது !


உப்பிட்டவனை உள்ளளவும் நினை ,

மறந்து போச்சே உலகம் ,

உழைத்து கொடுத்தவனுக்கு ,

உணவு இல்லையாம் ,

விளைவித்தவர்கலையே

அறுவடை செய்கிறது வறுமை !


தலை நிமிர்ந்த கட்டிடங்களால் ,

தலை குனிந்த நிலத்தடி நீர் ,

எட்டாத நூல் எட்டிப்பார்த்தும் கிட்டவில்லை ,

வற்றிப்போன ஆறுகளில்

நீர்தான் இல்லாமல் போகும் ,

இன்று மணலை கூட காணோம் !


விளைவித்த நிலங்கள்

இன்று விலை நிலங்களாய்,

பசுமை பரவிக்கிடந்த கழனியும் ,கொள்ளியும்,

பாலைவனமாக மாரிப்போச்சுதே ,

மனை பட்டாக்களால் !


சோம்பேறி உலகம்

உழைத்து சாப்பிட தயக்கம் ,

வழிப்பறி ,கொள்ளை ,

அதற்காக கொலை ,

சட்டத்தின் ஓட்டைகளில்

நன்றாகவே குளிர்காயும் குற்றவாளிகள் !


தொல்லைகளாக வரும்

தொலை பேசிகள் ,

இவர்களின் பேச்சு சுதந்திரம்

வானம் வரை கிழித்துக்கொண்டிருக்கிறது ,

இரவு உறக்கத்தில் அப்பன் ஆத்த தேவையில்லை ,

செல்போனே போதும் !


நேற்றுவரை கொலைகாரன்

இன்று பொதுநலவாதி ,

நாள் அவரே அரசியல் வாதி ,

கொடிகளாய் பறக்கும் அவர்களின் கோமணங்கள் ,

குற்றத்தில் இருந்து தப்பிக்க அரசியல் களம் ,

இங்கு ஒரு ருபாய் போட்டால்

ஓராயிரம் கோடிகள் சம்பாதிக்கலாம் !


பாரதியின் பாடல்களை

படிப்பதோடு விட்டுவிடாமல் ,

நடைமுறையில் நடைமுறைப்படுத்து ,

நாடு செழ்க்கும் நாமும் செழிப்போம் !


Rate this content
Log in

More tamil poem from Karthikeyan Karthikeyan

Similar tamil poem from Inspirational