Click here to enter the darkness of a criminal mind. Use Coupon Code "GMSM100" & get Rs.100 OFF
Click here to enter the darkness of a criminal mind. Use Coupon Code "GMSM100" & get Rs.100 OFF

J Selva Antony Santosh Achiever

Inspirational


5  

J Selva Antony Santosh Achiever

Inspirational


தோற்றமே (ஏ)மாற்றமாய்

தோற்றமே (ஏ)மாற்றமாய்

4 mins 337 4 mins 337


ஆகாரம் உருவாக்குபவரோ உறைவிடம் இன்றியிருக்க-

இணைகரம் இத்யாதி இணைகோடு

தேடியிருக்க-

ஆங்கிலம் இன்றி தவிக்கும் மூத்தோரின்

நடுவில்-

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் இளங்கன்றின் அத்தியாயம்-

கைக்குள்ளேயே முடியுமோ ;

அல்லது கைப்பக்குவம் காணுமோ ?

என் எண்ண அலைகள் ஏராளம்;

அவை வண்ண மைதாவில் இருப்பதே விவகாரம்;

எழுபதின் எள்குதலே இருபதைப் பற்றியே;


ஏகாலி போல இருக்க நினைக்கும் மனமோ- கோமாளி போல் ஆவதோ மைதாவினால்; போராளி போல் ஆவதோ- கோதுமையினால்; 

மெய் ஆவதும் ஆகாரத்தினாலே;

அழிவதும் ஆகாரத்தினாலே;

இக்கால உணவு வலுவானதா?..

இல்லை.. குழப்பமானதா?...

வலியன அழிவதும்;

அழகான விடம் ஆட்கொள்வதும்-

காலத்தின் கட்டாயமா … இல்லை

ஞானத்தின் மௌனமா?

சிறார்களின் தவறுகள் -எண்ணங்களால்

வருகிறதா- இல்லை அவை ஏந்தும்

வண்ண உணவுகளால் வருகிறதா?

உணவு ருசிப்பதற்கா? இல்லை

எச்சரிப்பதற்கா? உணவே மருந்து

என்பது அலைபேசி செய்திகளின்

நோக்கமா? அல்லது மருந்தே உணவு

என்பது     அலைபேசி செயலிகளின்

ஏக்கமா?


 

ஆவியில் வேகவைத்த உணவோ

நம் ஆவியை பரிசுத்த ஆவியாக்கும்;

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ

நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்;

சாதி, மதம் இன்றி கிடைக்கும் சாதமோ

சக்தியை கொடுப்பதற்கோ! இல்லை

சக்தியை பறிப்பதற்கோ?

இரவில் மைதா, எமனையும் கொல்லும்;

என்னையும் கொல்லும்! இதை அறிந்ததோ நேற்று; அறியாமையின்

கண் விழித்ததோ இன்று; புரோட்டா-

இது வரை என் நாயகன்;

இனி மேல் என் தீயவன்!

இது எனக்கு நிகழ்ந்த சோதனையா?

இல்லை இல்லை இது எனக்கு

இகழந்த இடரை நீக்கும் சத்திய சோதனை!

இதனால் ஏட்டைக் கொண்டு

என் ஏடனை வெல்வேன்!

ஆகாரத்தில் ஏன் வேண்டும் ஏண்?

சேதாரத்தில் நான் விழாமல் இருக்க;

ஏதும் ஏது கண்டால் சுற்றம் நிலைப்பதில்லை;

யாயும் நேயும் இரண்டறக் கலந்தது போல்;

சேயும் அதன் நேசமும் ஆகாரத்தின்-

மேல் அமைந்ததே!

பச்சைக் காயின் செஞ்சம் போல் இல்லாமல்-

எவ்வித புரோட்டடாவும் கொஞ்சம் உறுதியைத்

தராதே?

எண்ணெய் வகை  உணவு என்னை 

என்ன செய்யும் என எண்ணும் மக்களே

இங்கு அதிகம்;

மக்கள் மாக்களை உண்டதால் மக்கள்

மாக்களாகிவிட்டனர்!!!

செங்காயின் பலனோ ஏராளம்! 

அது செதுக்குவதோ நம்மை; ஆனால்- நாம்  அதை சிதைப்பதையே பொருளாய்

கொண்டுள்ளோம்;

உணவில் தோரணை காட்டாமல் தோரணியோடு இருந்தால்

தரணியை ஆளலாம்;

கேணியில் தண்ணீர் இருந்த வரை

தரணியில் தொந்தரவு இன்றி இருந்தோம்! 

சிலரின் வேட்கையாலும் பலரின்

வேடிக்கையாலும் வான் சிறப்பை இழந்தோம்! 

உணவின் முக்கியத்துவம் அறிந்து

எந்த  உணவை  சுவைத்தால்

அந்த நாட்டின் விதைகள் கிளர்ந்தெழுமோ அந்த உணவே

உண்மையான அறுசுவை உணவு;

மற்றவை அனைத்தும் பொய்யானவை;

அகம் செழிப்புடன் இருக்க புறம் புரதச் சத்தை ஆட்கொள்ள வேண்டும்;

நம் அகக்கண்ணிற்கு அனைத்தும்

தெரியும்; அதனால் அகங்காரம்் பாவத்தை ஆகாரத்தில்

காட்ட வேண்டாம்;

ஏன் என்றால் அகம்பாவம் மிகப்பெரிய

பாவம்;

உணவின் அகராதியில் நாம் கண்ட மெய்யெழுத்து , நம் உயிர்மெய் எழுத்து

அனைத்தும் கோப்புகள் ஆகி விட்டனவோ? இல்லை சத்துக்கள் தர உள்ளனவோ?

அதிகமாய் குருதியில் - மைதாவை அகலப்படுதினால் ; நம் புறம்-

நம் அகற்றின் அகதிகளாக

இருக்க நேரிடும்;

பூரி -  உணவுகளில் வைட்டமின்

உண்டோ? மனதிற்கு அகப்படாமல்

இருந்தால் வான் சிறபபு நம்

வசப்பாமல் இருக்க இயலாது;

ஆகாரத்தில் அகலக்கால் 

வைத்தாலாகாது;

அகவிலையில் ஆகாரம் -

ஏழைகளின் ஆதாரம்; அதுவே

நம் விவசாயிகளின் அவதாரம் !

ஏழைகளின் ஆதாரம்; அதுவே

நம் விவசாயிகளின் அவதாரம் !

அகவைக்கு ஏற்ற உணவு - முதுமைக்கு

உரிய மருந்து!


இக்கவிதை இக்கால அவசர உலகில் எதை உண்ண வேண்டும்? எதை உண்ணக் கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறது.மிக்க நன்றி!
Rate this content
Log in

More tamil poem from J Selva Antony Santosh Achiever

Similar tamil poem from Inspirational