தாய்ப் பாசம்
தாய்ப் பாசம்


அன்புள்ள நாளேடே,
சாலையெங்கும் நிரம்பி வழியும்
இனம்புரியா பேரமைதி - அது
ஏனென்று விளங்காமல்
ஒவ்வொன்றாய் வெறித்த வண்ணம்
சாலையெங்கும் தேடியலைய
அன்றாடம் கனியோ பிரசாதமோ
அரை வயிறேனும் நிரப்பிய
கோயில் வாசல் எங்கும்
ஏகாந்தம் அடைத்துக் கிடக்க
தலையில் கைவைத்து நிற்கையில்
எங்கிருந்தோ ஒரு குரல்
மெல்ல அழைக்க -
அதை தேடிச் சென்ற நொடியில்
வயிற்றுப் பசி போக்க
கிடைத்ததோர் ரொட்டித் துண்டு !
நாளும் கிடைக்குமா என்பது
சந்தேகமென்ற போதும்
குட்டியின் தற்சமய பசிக்கு
உணவினை எடுத்துக் கொண்டு
ஓடும் பாசத் தாய் !