ஓ மரமே
ஓ மரமே


உம் வேர்களால் உணவை உறிஞ்சி....
உம் கிளைக்கரங்களால் குடை பிடித்து...
உம் மலர்களால் படுக்கை விரித்து...
உம் இவைகளால் காற்றைத்தள்ளி....
மெல்லிய தென்றலால் எம் மேனியை வருடி...
மகரந்தத்தின் சுகந்தத்தை எம் நாசியில் தூவி....
குளிர்ச்சியினால் மனதில் கிளர்ச்சியை தூண்டி.....
கோடையில் ஓடையென ஓடும் வியர்வை நீருக்கு அணைகட்டி....
இலையாகி.... காயாகி..... பூவாகி.... கனியாகி...
உணவாகி.... உரமாகி.....
மருந்தாகி.....விறகாகி.... உயிர்வளியாகி... நிழலாகி...
குருகுகளும்... குரங்குகளும்.....
தங்கும் இடமாகி.... எல்லாருக்கும் எல்லாமாகி...
இல்லார்க்கும் இல்லமாகி....
வாழ்ந்தாலும்.... வீழ்ந்தாலும்..... காத்து நின்றாய்!
உமை காக்கத் தவறியதால் .....
இயற்கை எமைத் தாக்கத் தொடங்கியது! இப்போது தான் புரிகிறது....
மரமே, நீ இயற்கை எனக்கு கொடுத்த வரமே!
மரம் வளர்ப்போம்! மண் பயனுறச் செய்வோம்!🌳🌴🌲🍀☘