தன்னலமற்ற தையல்"
தன்னலமற்ற தையல்"


தரணியெங்கும் தேடிப் பார்த்தேன்....
தன்னலமற்ற உறவுகளை!
தாயை தவிர யாரையும் காணக் கிடைக்கவில்லை!
தாய் மஞ்சம் புகுந்தாள்
நாம் அவள் வயிற்றில் தஞ்சம் புகுந்தோம்!
அவள்......
சஞ்சலம் ஏதும் கொண்டதில்லை!
சலித்து யாதும் நாம் கேட்டதில்லை!
அவள் உலகம் நாமானோம்!
நமக்காக வாழ்ந்தாள்...
நலமெல்லாம் துறந்தாள்!
உயிரைக் கொடுத்தாள்.....
உணவைக் கொடுத்தாள்....
உருவம் தந்தாள்...
உலகம் மறந்தாள்...
உறக்கம் கலைந்தாள்....
புணர் ஜென்மம் எடுத்து....
ஒரு ஜென்மம் உழைத்தாள் நமக்காக!
தன் முந்தியில் வைத்து நம்மை காத்தவளை...
நம் புந்தியில் வைத்து காப்போம்!