STORYMIRROR

Uma Subramanian

Inspirational

5  

Uma Subramanian

Inspirational

நாங்களும் சிப்பாய்கள்😁

நாங்களும் சிப்பாய்கள்😁

1 min
460

ஆடை அவிழ்ந்து அம்மணமாய் நடந்தாலும்

நடை தளர்ந்து நடு வீதியில் கிடந்தாலும்

வாய்க்கு வந்தபடி பேசியே திரிந்தாலும்

ஈ மொய்த்து சடலம் என

சாக்கடைக்குள் சரிந்தாலும்

பசித்தீ தேகத்தை பற்றியே எரித்தாலும்

வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும்

பிள்ளைகள் எனை எட்டியே உதைத்தாலும்

மனைவி வசவுகள் பாடி திட்டியே தீர்த்தாலும்

பெற்றோர்கள் சாபங்களை அள்ளி அள்ளி வார்த்தாலும்

என் குடும்பப் படகு துன்பக் கடலில் 

தவித்தாலும்

பொருளாதாரச் சரிவெனும் புயலில் 

நாடெனும் கலம் நடுகடலில் தத்தளிக்கும் போதெல்லாம் 

தண்ணிக் கடலில் மூழ்கி 

நான் தத்தளித்தே தடுமாறினாலும்

என் பலம் கொண்ட மட்டும் இழுத்து 

கரை சேர்த்திடும் உண்மைக் குடிமகன்!

மெழுகாய் நாளும் எனை உருக்கி 

அழகாய் அன்னை தேசம் காக்கும் 

நாங்களும் நாடு போற்ற வேண்டிய 

சிப்பாய்களே!  

  

  

 

 

  

  

  

 



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational