தேன் சிட்டு
தேன் சிட்டு


துறுதுறுவென பறந்தே
விறுவிறுப்பாய் தான்
மலர்களில் விதவிதமாய்
மேலும் கீழுமாய்
பக்கவாட்டிலும் பறந்தபடியே
மலர்கள் சமந்து நிற்கும்
தேனை குடிக்கும் தேன் சிட்டே !
உந்தன் வளைந்த அலகில்
குடிக்கும் தேனுடன்
மகரந்தமுமே சேர்ந்து கொள்ள
மலர்களின் மகரந்தச் சேர்க்கையில்
நீயுமே பெருதவி புரிகிறாயே !
தித்திக்கும் பாகினையே
சிறு குடுவையில் ஊற்றி வைத்தாலே
ரீங்காரமிட்டே கூட்டமாய்
தேன் குடிக்க தானே வருவீரே !
உமது விறுவிறுப்பான ரீங்காரத்தோடே - இனிதே
நாளும் கழியுமே !