Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Abstract

4.5  

Tamizh muhil Prakasam

Abstract

உறவுகளின் இனிய சந்திப்பு

உறவுகளின் இனிய சந்திப்பு

1 min
23.1K


ஊரெங்கும் அமைதியாய் அடங்கிட

காற்றில் கலந்து வரும் புகையும்

இல்லாமல் தான் ஆகிட

புள்ளினங்களின் கொஞ்சும் ஒலிகட்கு

போட்டியாய் தானொலித்த

வாகன ஒலிப்பானின் ஒலியும்

அருகியே தான் போய் விட

மரங்களிலும் கட்டிடப் பொந்துகளிலும்

ஒடுங்கியே நடுங்கிக் கிடந்த புள்ளினங்களும்

படபடத்து இருந்த நிலை மாறி

தம் இருப்பிடம் சுற்றியே

உலவி வருகையில்

உறவுகளின் சந்திப்பு நிகழ்வு

யாருமற்ற நீண்ட நெடுஞ்சாலையில்

இனிதே தான் நடந்தேறுகிறது !



Rate this content
Log in

Similar tamil poem from Abstract