வேப்பமரம்
வேப்பமரம்


காலைத் தென்றல்
தவழ்ந்து வர
நானும் அதனுடன்
இணைந்து பாடி வர
தெருவெங்கும்
மது புட்டிகள் விதைத்த
மனிதர்கள் நிலைகண்டு
மனம் உருகிய வேண்டுதல்
பிரார்த்தனையால் கரோனாவாக
வந்தாயோ!
மது ஒழிப்பு நிரந்தரமாக
ஒழிந்தால்தான்
இங்கிருந்து போவாயோ!
கருணை கூர்ந்து
அப்படியே தீயவழி
நடப்பவர்களை மட்டும்
கவர்ந்து நீயும்
நல்வழி மனிதர்களைக்
காத்திடுவாயா!
அறிவியல் கண்ட
அற்புத மனிதர்கள்
யாவரும் மண்ணில்
புதைந்துவிட்டபிறகு
நல்ல மனிதர்களைக் காக்க
காந்திக்கு எங்கே போவது?
தயை கூர்ந்து
வேப்பமரமாகிய
என் சொல் கேட்டு
இவ்வுலகை விட்டு
அகல்வாயே!
மஞ்சள் அழகியும்
நிலவேம்பும் துணையாகி
உன்னிடம் வேண்டி
நிற்க இன்னமும் நீ
புவிதனில் பரதம்
ஆடுவதன் காரணம்
சிதம்பர ரகசியமா!