அப்பா
அப்பா
தெருவோரங்களில் மார்கழி
நேரத்து விடியல் கோலங்கள்
சிரிக்கின்ற காலையிலே
நீங்களும் நானும்
ஒவ்வொரு வீட்டின்
கோலங்களை மதிப்பிட்டு
சிரித்த நாட்களை
எண்ணியே எனது
வீட்டின் வெறும் வாசலை
உற்று நோக்கியபடி
மறுபடியும் உங்கள்
வரவுக்காக காத்திருக்கின்றன
ரங்கோலி பொடிகள்.