ஞாயிறு பாடம்
ஞாயிறு பாடம்
முதல்நாள் மாலையில்
குருதிச் சிகப்பில்
வண்ணக்கோளமாய்
அரபிக்கடலில்
மூழ்கிய ஞாயிறு
மறுநாள் காலையில்
தங்கப்பந்தாய்
ஒளிர்ந்து எழுகையில்
வங்கக்கடலினை
தங்கக்கடலாய் மாற்றிடுமே..
மூழ்கிடும் வேளையில்
ஒளிர்ந்திடும் கதிரவன்
சிரித்திடும் அழகினை
சிவந்த முகத்தில்
பார்த்து மகிழலாம்..
எழுந்திடும் போதும்
பொன்னிற பகலவனை
மின்னிடும் உருண்டையாய்
கிழக்கு அடிவானில்
கண்டு நெகிழலாம்...
கோடையில் நடுப்பகல்
p>
சூரியன் வெம்மையின்
தாக்கத்தைப் போல, மனதெழும்
கோபம் தன்னையும் தாக்கி
சூழ்ந்த உறவுகளையும் தாக்கிடுமே..
மனிதா...
காலையில் கதிரவன்
சிரிப்பிடமும்
மாலையில் பகலவன்
அழகிடமும்
சிரித்து மகிழ்ந்திடக் கற்று
பழகிக்கொண்டால்
வாழ்க்கையிலென்றும்
மங்களம் நிரம்பி
மங்காமல் ஒளிவீசும்..