ஏக்கம்
ஏக்கம்
ஏழை கூரையைப் பிய்த்துக்கொண்டு பணம் கொட்டதா என்று ஏங்குகிறான்
பணக்காரன் படுத்தவுடன் கண்களைத் துயில் தழுவாதா என்று
ஏங்குகிறான்
மாணவன் இப்போது போல் எப்போதும்
பரீட்சை இல்லாமல் பாஸ் போடமாட்டார்களா என்று
ஏங்குகிறான்
காதலன் தன் காதலியை
இரு பெற்றோர் சம்மதத்துடன் கைபிடிக்க
முடிய வேண்டுமே என்று
ஏங்குகிறான்
விவசாயி முப்போகம்
விளைய மாதம் மும்மாரி பொழியுமா என்று
வானத்தைப் பார்த்து
ஏங்குகிறான்
நேர்மையான அரசியல்வாதி மக்கள் சேவை செய்ய வாய்ப்பு
கிடைக்குமா என்று
ஏங்குகிறான்
போலி அரசியல்வாதி
குறுக்கு வழியில் குபேரனாக வழிகள் கிடைக்குமா என்று ஏங்குகிறான்
இவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன் இதைப்போல் இன்னும் பலரின் ஏக்கங்களை எப்படித் தீர்ப்பேன் என்று ஏளனமாக சிரிக்கிறான்.