பேரகுழந்தை
பேரகுழந்தை
உடலும் மனமும் சோர்ந்து
வீட்டு வேலைகளையும்
வீட்டு மனிதர்களையும்
விட்டு விடுதலையாகி
கண் காணா இடத்துக்கு
ஓடிவிடலாமா
என்று எண்ணும் போதெல்லாம்
அந்த எண்ணத்தை மாற்றி
மீண்டும் சம்சார சாகரத்தில் மூழ்கி
பாசத்தில் வழுக்கி விழவைப்பது
பேரக்குழந்தையின்
அன்பும் சிரிப்பும் அணைப்பும் தான்